மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே காவலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒருவர் போலீசார் கைது செய்தனர்.
கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற காவலர் கடந்த 27-ஆம் தேதி கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், கடந்த 29ஆம் தேதி தேனியில் வைத்து பொன்வண்ணன் என்பவரை சுட்டுப் பிடித்தனர்.
தொடர்ந்து, பாஸ்கரன், பிரபாகரன், சிவனேஸ்வரன் ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதாப் என்பவரையும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.