தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில், பக்தர் ஒருவர் தீக்குழியில் தவறி விழுந்ததால் பதற்றம் நிலவியது.
தேப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் சுந்தர மகா காளியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது.
அப்போது பாலகிருஷ்ணன் என்ற பக்தர் கால் தடுமாறி தீக்குளியில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பக்தரை மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.