தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறது
இந்நிலையில் பயனாளிகளிடம் கமிஷன், பணிக்கு செல்லாதவர்களுக்கு ஊதியம், அதிக விலைக்கு பொருட்கள் கொள்முதல் என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 112 கோடி ரூபாய் ஊழல் நடந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. நூறு நாள் வேலை திட்ட நிதி, ஊரக வளர்ச்சித் துறையின் பிற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இத்திட்டத்திற்கு நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில் 39 ஆயிரத்து 339 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.