தாய்லாந்தில் 30 மாடி கட்டடம் நிலநடுக்கத்தால் தரைமட்டமானது தொடர்பாக சீன கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்தில் கடந்த 28ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது பாங்காக்கில் இருந்த 30 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. தாய்லாந்து அரசின் தணிக்கை துறைக்காக 529 கோடி ரூபாய் மதிப்பில் சீன நிறுவனம் டெண்டர் எடுத்து கட்டுமான பணிகளை மேற்கொண்ட நிலையில், நிலநடுக்கத்தின்போது கட்டம் இடிந்து தரைமட்டமானது.
30 மாடி கட்டடம் இடிந்து நொறுங்கிய சம்பவம் சர்வதேச அளவில் பேசும் பொருளாகி உள்ள நிலையில், இது குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தாய்லாந்து அரசு கூறியுள்ளது. மேலும், சீன நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.