திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் மரகத நடராஜர் சன்னிதி, இன்று முதல் 4 நாட்கள் பக்தர்களின் தரிசனத்திற்குத் திறக்கப்படுகிறது.
வரும் 4ஆம் தேதி திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி இன்று மதியம் ஒரு மணிக்குத் திறக்கப்படும் மரகத நடராஜர் சன்னிதியில் தொடர்ந்து 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
4ஆம் தேதி இரவு மரகத நடராஜருக்கு 32 வகை மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய சந்தனம் சாற்றப்பட்டு நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.