சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியலிங்கம் நகர்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ரோகித் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார்.
இரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றார். இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.