நீலகிரிக்கு செல்ல 6 ஆயிரம் வாகனங்களுக்கான இ-பாஸ் வழங்கும் பணி
பகல் 12 மணிக்குள்ளாகவே நிறைவடைந்தது. இதனால், மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
இருப்பினும், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்கள், அரசு பேருந்துகள், மருத்துவம் மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோருக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மாவட்ட எல்லைகளில் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 6 பேர் அடங்கிய குழுக்களாக மொத்தம் 90 பேர் இ-பாஸ் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 6 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி வழங்கும்பணி பகல் 12 மணியளவிலேயே நிறைவடைந்தது. இதனால், மற்ற வாகங்கள் திரும்பி சென்றன.