நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே சுற்றுலாப் பயணிகள் வந்த கார், தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு நான்கு பேர் சுற்றுலா சென்றுள்ளனர். அந்த கார் குன்னூர் அருகே 4-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, திடீரென காரின் முன்புறத்தில் இருந்து புகை கிளம்பியுள்ளது.
இதனையடுத்து அதில் பயணித்த நால்வரும் கீழே இறங்கிய நிலையில் கார் மளமளவெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.