தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டத்தில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொண்டா பேட்டையில் உள்ள ஆஞ்சனேயர் கோயிலுக்கு உறவினருடன் சென்ற இளம் பெண் அங்கு நடைபெற்ற பஜனை நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இரவு இயற்கை உபாதையை கழிக்க உறவினரை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த 7 பேர் கும்பல், உறவினரை கட்டிப்போட்டு விட்டு, இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதுபற்றி அளித்த புகாரின் பேரில் கோயில் ஒப்பந்த ஊழியர் உட்பட 7 பேரை கைது செய்து தெலங்கானா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.