பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் அன்போடு கேட்கும் கோரிக்கைகள் அனைத்தும் அன்போடு பரிசீலிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தனது தொகுதியில் பாலம் அமைத்துக் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், தான் கேட்ட அனைத்தையும் வழங்கும் முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். பின்னர் பாபநாசம் – மணிமுத்தாறு அணையை ஒன்றாக இணைக்க வேண்டும், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், உறுப்பினரின் நன்றியை எதிர்பார்த்து திட்டங்களைச் செயல்படுத்துவது இல்லை எனவும், உறுப்பினர் அன்போடு கேட்ட கோரிக்கைகள் அனைத்தும் அன்போடு பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.