கூடலூர் அருகே ரேசன் கடையை உடைத்து காட்டு யானை அரிசி உண்பது கூடத் தெரியாமல், இருவர் நடைபாதையில் கட்டிப்பிடித்தபடி உறங்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி கிராமத்தில் புகுந்த காட்டு யானை அங்குள்ள நியாயவிலைக்கடையை உடைத்து, அரிசியை உண்டது.
அப்போது கடைக்கு அருகே நடைபாதையில் இருவர் காட்டு யானை வந்ததுகூட தெரியாமல் அயர்ந்து உறங்கியபடி இருந்தனர். யானையை விரட்ட வனத்துறையினர் அதிக ஒலி எழுப்பியபோதுகூட அவர்கள் இருவரும் எழவில்லை.