திருவள்ளூர் மாவட்டம், சிறுவாபுரி முருகன் கோயிலில் முறையான வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தித் தரப்படாததால் பக்தர்கள் அவதியடைந்தனர்.
சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்துக்காகக் குவிந்தனர்.
அவர்களது வாகனங்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடந்தே சென்றனர். இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் கோடையை கருத்தில் கொண்டு கோயிலுக்கு அருகிலேயே வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.