தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையைக் குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குவதாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் விமர்சித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இது பற்றிப் பேசிய அவர், தமிழக ஆட்சியாளர்களின் குறுகிய மொழி அரசியலால் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், உத்தர பிரதேசத்தில் தென் இந்திய மொழிகள் உட்பட 5 மொழிகள் கற்றுக்கொடுக்கப்படுவதாகத் தெரிவித்த அவர், அதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதாகக் கூறினார்.