வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா புதன்கிழமையன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக, வக்பு சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார்.
அந்த மசோதா, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், வக்பு சொத்துகளை முறைகேடாக அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதனால் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்ட நிலையில்,
அக்குழு பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவையும், தனது அறிக்கையையும் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
வரும் 4-ந் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா புதன்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் பாஜக எம்பிக்கள் அனைவரும் நாள் முழுவதும் அவை நடவடிக்கையில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பா.ஜ.க. கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.