டெல்லி – டேராடூன் விரைவு சாலை பணிகளை முடிக்க அப்பகுதியில் அமைந்துள்ள ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட வீடு தடையாக உள்ளது.
212 கி.மீ நீளமுள்ள டெல்லி – டேராடூன் விரைவு சாலை பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தச் சாலை பணிகளை முடிக்க அப்பகுதியில் அமைந்துள்ள வீர்சென் சரோஹா என்பவரது வீடு தடையாக இருந்ததால், அவரது வீடு அமைந்துள்ள நிலத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கையகப்படுத்தியது.
இதனை எதிர்த்து வீர்சென் சரோஹாவின் பேரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு விசாரிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரைந்த நிலையில், வரும் ஏப்ரல் 16-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.