இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொடைக்கானலில் உள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக உயர்நீதிமன்ற உத்தரவுப் படி இ-பாஸ் நடைமுறையானது அமலுக்கு வந்தது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது குறைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
மேலும், கோடைக்காலத்தில் அதிகளவில் வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே தாங்கள் தொழில் செய்வதாகவும், இ-பாஸ் நடைமுறையால் அது பாதிக்கப்படுதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.
தங்களுடைய தொழில் பாதிக்காத வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.