ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், லக்னோ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடந்த ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங்கை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
இதன் பின்னர் 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடியது. 16.2 ஓவரில் 177 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்களுடனும், நேஹல் வதீரா 43 ரன்களுடன் களத்தில் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.