சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையே நடைபெறும் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 5ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது . இந்த போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற நெருக்கடியில் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணியளவில் தொடங்குகிறது. போட்டிக்கான டிக்கெட் விலை 1,700 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட உள்ளது என சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.