சிலி, கலை மற்றும் கலாச்சாரம் அமைச்சர் கரோலினா அரேடோண்டோவை மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்
இந்தியா-சிலி கலாச்சார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கலை மற்றும் பாரம்பரியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இருதரப்பு உறவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு தவைர்களும் விவாதித்தனர்.
சிலி தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் மார்ட்டின் கோர்மாஸ், வெளியுறவு அமைச்சக துணைச் செயலாளர் லட்சுமி சந்திரா மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக இணைச் செயலாளர் (திரைப்படங்கள்) டாக்டர் அஜய் நாகபூஷண் எம்.என். உள்ளிட்ட சிலி தூதுக்குழு உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.