70 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 1 மற்றும் குரூப் 1 ஏ தேர்வு அறிவிப்பாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, 70 காலி பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு ஜூன் 15 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.