மதுரையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சுபாஸ் சந்திர போஸின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மதுரை மாவட்டம் தனக்கன்குளம் அருகே கிளாமல் காளி என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆஸ்டின்பட்டி போலீசார், கொலையில் தொடர்புடைய 7 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் சுபாஷ் சந்திர போஸ் என்பவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்த நிலையில், விமான நிலையம் செல்லும் சாலையில் போலீசார் அவரை என்கவுண்டர் செய்தனர். இதை தொடர்ந்து ராஜாஜி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு நடைபெற்ற பின்னர், ராமநாதபுரத்தில் உள்ள சொந்த ஊருக்கு சுபாஸ் சந்திர போஸின் உடல் எடுத்து செல்லப்பட்டது.