சென்னை மடிப்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மடிப்பாக்கத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நெல்சன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதையறிந்த இளம்பெண்ணின் அண்ணன் ரஞ்சித்குமார், தனது தங்கையை பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நெல்சன், ரஞ்சித் குமார் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றுள்ளார். இதில் ரஞ்சித்குமாரின் இருசக்கர வாகனம் தீக்கிரையான நிலையில், புகாரின் பேரில் நெல்சன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.