தருமபுரியில் பாதாள சாக்கடை கால்வாய் மற்றும் தொட்டி அமைக்கும் பணி மந்தகதியில் நடைபெறுவதால் மக்கள் கடும் சிரமமடைந்துள்ளனர்.
நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த லட்சுமி மாது என்பவர் உள்ளார். இவர், நகராட்சியில் நடைபெறும் பணிகளை கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக 26 வது வார்டு காந்தி நகரில் பாதாள சாக்கடை கால்வாய் மற்றும் தொட்டி அமைக்கும் பணி மெதுவாக நடந்து வருவதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க நகர்மன்ற தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.