கோவை அருகே அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத 14 வயது மாற்றுத் திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொண்டாமுத்தூர் முத்தி பாளையம் பகுதியில் வசித்து வரும் சிறுமியை இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
அப்பகுதியில் அழுதபடி நின்ற சிறுமியை மீட்ட முதியவர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து சிறுமியைப் பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், சந்தேகத்தின் பேரில் ஐந்து பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.