கன்னியாகுமரியில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சரல்விளை பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம் என்பவர், முட்டைக்காடு பகுதியில் உள்ள கடைக்குத் தேநீர் அருந்தச் சென்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் சாலையோரம் இருந்த இருசக்கர வாகனங்களை இடித்துத் தள்ளிவிட்டு, கூலித் தொழிலாளி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில், கார் ஓட்டுநரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.