நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் தீ மிதி திருவிழாவில் 6 மாத குழந்தையுடன் பக்தர் ஒருவர் தீ குண்டத்தில் தவறி விழுந்தார்.
ஆவாரங்காடு பகுதியில் உள்ள அக்னி மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் குமார் என்ற பக்தர் தனது 6 மாத கை குழந்தையுடன் கலந்துகொண்டார்.
அக்னிக் குண்டத்தில் நடந்துசெல்லும் போது 6 மாத கை குழந்தையுடன் அவர் கீழே விழுந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் சிறு காயங்களுடன் மீட்டனர்.