ஹைதராபாத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஜெர்மனியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இந்தியாவிற்கு வருகை தந்தார். பல்வேறு நகரங்களை சுற்றி பார்த்த இருவரும், இறுதியாக ஹைதராபாத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இவர்களை காரில் ஏற்றிச்சென்ற இளைஞர் ஒருவர், ஆண் நண்பரைத் தனியாக இறக்கிவிட்டுவிட்டு, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் அரங்கேறிய 12 மணி நேரத்தில் அந்த இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.