கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தொழிலதிபரிடம் பணம் பறித்த வழக்கில் தனியார்ப் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ராகேஷ் என்பவருக்குப் பள்ளி ஆசிரியையான ஸ்ரீதேவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்ட நிலையில், ராகேஷிடம் இருந்து ஸ்ரீதேவி பல லட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ளார்.
கடனை திருப்பி கேட்டபோது ராகேஷுக்கு மிரட்டல் விடுத்த ஸ்ரீதேவி, அவரை காரில் கடத்தி சென்று ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளார்.
இது குறித்து ராகேஷ் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த ஸ்ரீதேவி உள்ளிட்ட 3 பேரை மத்திய குற்றப்பிரவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.