கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோட்டை மாரியம்மன் கோயில் தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பாகலூர் கிராமத்தில் 453 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பங்குனி மாத தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.