பெங்களூருவில் பல ஆண்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியையின் குற்றப் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பல ஆண்களை ஏமாற்றி லட்சங்களைச் சுருட்டியவர்தான் ஸ்ரீதேவி ருத்தகி… கர்நாடகா மாநிலம் பெங்களூரிலுள்ள கின்டர் கார்டன் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார்.
என்னதான் புரோபஸன் ஆசிரியராக இருந்தாலும், இன்ஸ்டகிராமில் தன்னை ஒரு மாடல் போல் பாவித்து வந்திருக்கிறார் ஸ்ரீதேவி… பள்ளியில் Strict டீச்சராக வலம்வந்த ஸ்ரீதேவி தன்னுடைய பள்ளி மாணவர் ஒருவரின் தந்தையைக் கடத்தி தற்போது வழக்கில் சிக்கியிருக்கிறார்.
பெங்களூரில் தொழிலதிபராக உள்ளவர்தான் ராகேஷ்… இவருடைய இரண்டு வயது மகனை, ஸ்ரீதேவி வேலை பார்க்கும் கின்டர் கார்டன் பள்ளியில் சேர்த்திருக்கிறார். மகனை அடிக்கடி பள்ளியில் பிக்கப் டிராப் செய்து வந்த ராகேஷிற்கும், ஸ்ரீதேவிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது… இருவரும் அவ்வப்போது வெளியில் சந்தித்துப் பழகி வந்திருக்கிறார்கள்… இந்த சூழலில் தான் ஸ்ரீதேவி தனக்கு அவசரமாக 4 லட்சம் தேவைப்படுவதாக ராகேஷிடம் கேட்டிருக்கிறார்.
ராகேஷ் சற்றும் யோசிக்காமல் நான்கு லட்ச ரூபாயை ஸ்ரீதேவியிடம் கொடுத்திருக்கிறார்… ஆனால், ஸ்ரீதேவியோ கைக்குப் பணம் வந்தவுடன் ராகேஷ் உடனான பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்திருக்கிறார்… தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராகேஷ் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டுச் சண்டையிட்டிருக்கிறார்.
ராகேஷின் செயலால் கடுப்பான ஸ்ரீதேவி தான் கொடுத்த முத்தத்திற்கு தலா ஐம்பதாயிரம் சர்வீஸ் சார்ஜ் என கூறி எஸ்கேப் ஆகியிருக்கிறார். மேலும் இருவரும் தனிமையிலிருந்த வீடியோக்களை காட்டி மிரட்டி ராகேஷிடம் மேற்கொண்டு 19 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்… பயந்துபோன ராகேஷ், ஸ்ரீதேவியை பிளாக் லிஸ்டில் போட்டுவிட்டு தலைமறைவாகியிருக்கிறார். ஆனால், ஸ்ரீதேவி விடுவதாக இல்லை…தன்னுடைய காதலன் சாகர் மற்றும் பிரபல ரவுடி கணேஷ் ஆகியோருடன் கூட்டுச்சேர்ந்து ராகேஷை காரில் கடத்தியுள்ளார்.. பயந்துபோன ராகேஷ் தன்னுடைய வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சத்து 90 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.
கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்துவந்த ராகேஷ் காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் ஸ்ரீதேவி, அவரின் காதலன் சாகர் மற்றும் ரவுடி கணேஷ் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஸ்ரீதேவியை பயன்படுத்தி மேலும் பல குழந்தைகளின் தந்தைகளிடம் இந்த கும்பல் கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்திருக்கிறது. முழுமையான விசாரணைக்கு பிறகே ஸ்ரீதேவியின் ஹனி டிராப்பில் எத்தனை பேர் சிக்கியிருக்கிறார்கள் என்ற தகவல் தெரியவரும்.