வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் கூட்டுக்குழு பரிந்துரைகளை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பது ஏன் என மத்திய உள்துறை அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், எதிர்க்கட்சியினரின் வலியுறுத்தலின் பேரில் வக்ஃபு விவகாரத்தில் கூட்டுக்குழு அமைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அவர், காங்கிரஸ் ஆட்சியைப் போல அல்லாமல், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்து மாற்றங்களை முன்மொழிந்ததாகத் தெரிவித்தார்.
ஆனாலும் கூட்டுக்குழு பரிந்துரைகளை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பதாக அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.