உலகின் அனைத்து தலைவர்களிடமும் சர்வ சாதாரணமாகப் பேசும் வல்லமை படைத்தவர் பிரதமர் மோடி என, சிலி அதிபர் காப்ரியேல் போரிக் ஃபான்ட் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிலி நாட்டின் அதிபா் கேப்ரியல் போரிக் ஃபான்ட், 5 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா்.
டெல்லியில் நேற்று பிரதமா்மோடி, சிலி அதிபா் கேப்ரியல் போரிக் ஃபான்ட் ஆகியோர் சந்தித்துப் பேசினர். அப்போது இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிலி அதிபர் காப்ரியேல் போரிக் ஃபான்ட், பிரதமர் மோடி சர்வதேச தலைவர்களிடம் சர்வ சாதாரணமாகப் பேசும் வல்லமை படைத்தவர் என்று தெரிவித்தார்.