குஜராத் மாநிலத்தில் பிரபல நகைக் கடை உரிமையாளர் தனது ஊழியர்களுக்குச் சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
பிரபல கப்ரா ஜுவல்ஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டில் 200 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இதையடுத்து ஊழியர்களை கெளரவிக்கும் வகையில், அந்நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் கப்ரா, உயர் ரக சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள், செல்போன்கள், தங்க நாணயங்களை வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார்.