கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்து பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா அறிவித்தார். அதன்படி, பெங்களூரு அருகே உள்ள சுதந்திர பூங்காவில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கர்நாடக சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் சலவதி நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சட்டப்பேரவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சலவதி நாராயணசாமி, கர்நாடகாவில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் காங்கிரஸ் அரசு உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டினார். காங்கிரசில் உள்ள அமைச்சர்கள், தங்கள் துறைகளை நிர்வகிக்க தகுதியற்றவர்கள் எனவும் விமர்சித்தார்.