கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 25 சதவீத வரியை ரத்து செய்ய கோரி ஜனநாயக கட்சியினருடன் இணைந்து குடியரசு கட்சி செனட்டர்களும் குரல் கொடுத்துள்ளனர்.
அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதிக்கும் உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார். இந்த உத்தரவு அமெரிக்காவில் விலைவாசி உயர்வை ஏற்படுத்துவதுடன், வளர்ச்சியை பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் 25 சதவீத வரியை ரத்து செய்ய கோரி ஜனநாயக கட்சியினருடன் இணைந்து குடியரசு கட்சி செனட்டர்களும் குரல் கொடுத்துள்ளனர்.
கென்டக்கி, மைனே, அலாஸ்கா உள்ளிட்ட 4 மாகாணங்களை சேர்ந்த குடியரசுக் கட்சி செனட்டர்களும் அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். வரி உயர்வால் அமெரிக்க மக்கள் எதிர்மறையான தாக்கத்தை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.