பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் மாபெரும் மாற்றத்தை கண்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உருவான தின நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. இருமாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் ராஜஸ்தானியர்களின் சிறப்பு மரியாதையுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து விழாவில் உரையாற்றிய ஆளுநர், ஒருபக்கம் இமயமலை ஒருபக்கம் பெருங்கடல் என எல்லா வளங்களையும் கொண்டது இந்தியா எனக் கூறினார். இந்தியாவின் கலாசாரம், இலக்கியங்களை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் எனவும், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
10 ஆண்டுகளுக்கு முன்பு பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, தற்போது அனைத்திலும் முன்னேறி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.