விருதுநகர் அருகே வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டெடுக்கப்பட்டது.
வெம்பக்கோட்டை விஜய கரிசல் குளத்தில் 22 குழிகள் தோண்டப்பட்டு, 3-ம் கட்டமாக அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் இதுவரை சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் குவளைகள் என 4 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தங்கத்தால் செய்யப்பட்ட மணி ஒன்று அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த மணி, 6 மில்லி மீட்டர் சுற்றளவும், 4 புள்ளி7 மில்லி மீட்டர் கணமும், 22 மில்லி கிராம் எடையும் கொண்டதாக இருப்பதாகவும், வெம்பக்கோட்டை அகழாய்வில் இதுவரை தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.