கச்சத்தீவை மீட்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, 4 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்துடைப்பு நாடகம் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செய்தியாளர்களிடம் அவர் வாய்மூடி மௌனியாக இருந்த திமுக, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கச்சத்தீவை மீட்போம் என்று வாக்குறுதி அளித்தது.
அதன்படி திமுக, ஆட்சி அமைத்து 4 ஆண்டுகளாகியும் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், சிறையில் அடைப்பது என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக அவர் கூறினார்.
இதனால் திமுக செய்த தவறால் மீனவர்களை மீட்பதே மத்திய அரசின் வேலையாக உள்ளதாக தெரிவித்தார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறினார்.