கல்லிடைக்குறிச்சியில் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்டோரை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுவனை தெருநாய் கடித்துள்ளது. இதேபோன்று, செட்டி பிள்ளைவாள் தெருவை சேர்ந்த 2 சிறார்கள் உட்பட 10 பேரை தெருநாய்கள் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.