கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அடுத்த சின்னகுத்தி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பாப்பாம்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். கடந்த 19ஆம் தேதி சக்திவேல் பாப்பம்மாவின் சகோதர் வெங்கடேஷுடன் மரம் வெட்டுவதற்காக பர்கூர் வனப்பகுதி சென்றுள்ளார்.
பின்னர் 23ஆம் தேதி சக்திவேல் வீட்டாரை தொடர்பு கொண்ட வெங்கடேஷ், காட்டில் மரம் அறுத்தபோது வனத்துறையினர் சக்திவேலை என்கவுண்டர் செய்ததாகவும், தாங்கள் தப்பி ஓடி வந்ததாகவும் கூறி அழைப்பை துண்டித்துள்ளார்.
பின்னர், சடலத்தை கைப்பற்றி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சக்திவேலை கொலை செய்ததாக வெங்கேடஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.