கோவை, மருதமலை முருகர் கோயிலின் அருகே இருக்கும் தியானமண்டபத்தில் வெள்ளி வேல் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தியான மண்டபத்தில் இரண்டரை அடி உயரத்தில் வெள்ளி வேல் வைக்கப்பட்டு இருந்தது.
4 லட்ச ரூபாய் மதிப்பிலான இந்த வெள்ளி வேலை ஒருவர் திருடிச் சென்றுள்ளார். மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் வெள்ளி வேல் திருடப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி வெள்ளி வேல் திருடு போன சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.