இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக ஆளுநர் R.N. ரவிக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர் ஆர்.என். ரவி என்றும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவும், கல்விச் சீர்திருத்தங்களுக்காகவும் அயராது உழைப்பவர் என்றும் கூறியுள்ளார்.
அவர் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.