பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாட்கள் பயணமாக தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள 7 நாடுகள் ஒன்றிணைந்து பிம்ஸ்டெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இதில் இந்தியா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளை தாய்லாந்தில் நடைபெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தாய்லாந்து சென்றடைந்தார்.
தனிவிமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சார்பிலும், அந்நாட்டு அரசு சார்பிலும் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
சிவப்பு கம்பளம் விரித்தும், பூங்கொத்து கொடுத்தும் அதிகாரிகள் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து பாரம்பரிய நடனமாடி இந்திய வம்சாவளியினர் அளித்த உற்சாக வரவேற்பை மனமகிழ்வோடு ஏற்றுக்கொண்டார்