வேங்கைவயல் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி காவலர் உட்பட 3 பேர் தொடர்ந்த மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காவலர் முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி 3 பேரும் மனுதாக்கல் செய்தனர். மறுபுறம், ஆதாரப்பூர்வமான சாட்சியங்கள் உள்ளதால் 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜராகிய நிலையில், வழக்கை விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.