கோவையில் லாரி ஓட்டுநரை கொலை செய்துவிட்டு தலைமாறைவாகி இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
போத்தனூர் செட்டிப்பாளையம் பகுதியில் கடந்த மாதம் 25ம் தேதி ஓட்டுநர் ஆறுமுகத்தை கொலை செய்துவிட்டு தலைமறைவாகி இருந்த சியாஸ் என்பவர், மதுக்கரை பகுதியில் மது அருந்திவிட்டு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை கண்டு போலீஸ் வாகனம் என எண்ணிய சியாஷ் பாலத்தில் இருந்து கீழே குதித்து காயமடைந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சியாஸை கைது செய்து சிறையிலடைத்தனர்.