மியான்மரில் ஆளும் ராணுவ அரசு தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மியான்மரில் கடந்த 4 ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை எதிர்க்கும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே போர் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாட்டின் சுகாதார உட்கட்டமைப்பு மிகவும் மோசமானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் ஏப்ரல் 22-ம் தேதி வரை தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக மியான்மர் ராணுவ அரசு தெரிவித்துள்ளது.