பிரதமர் மோடி வருகையொட்டி நாளை மற்றும் நாளை மறுதினம் ராமேஸ்வரம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் பாம்பன் புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அன்று ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அரசு தங்கும் விடுதி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஐஜி நவநீத்குமார் மேத்ரா தலைமையிலான பாதுகாப்பு அதிகாரிகள் ராமேஸ்வரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.