குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே மாதம் சபரிமலைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மே மாதத்தின் மத்தியில் நடைபெறும் மாதாந்திர பூஜையில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வரும் திரௌபதி முர்மு, பின்பு ஹெலிகாப்டர் மூலமாக நீலக்கல்லுக்குச் செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
அங்கிருந்து கார் மூலமாகப் பம்பைக்குச் செல்லும் அவர், பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பம்பையிலிருந்து சன்னிதானத்துக்குச் செல்லக்கூடிய மலைப்பாதை மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.