திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் நடிகை பூஜா ஹெக்டே சாமி தரிசனம் செய்தார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்ய குடும்பத்தினருடன் வருகை தந்தார். அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற சிறப்புப் பூஜையில் நடிகை பூஜா ஹெக்டே கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அப்போது, அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அவருக்கு வேதச்சாரிகள் பிரசாதங்களை வழங்கினர். இந்நிலையில், திருப்பதி கோயிலில் நடிகை பூஜா ஹெக்டே சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.