வக்பு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றி பிரதமர் மோடி தலைமையிலான அரசு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வக்பு சொத்துக்களைச் சுரண்டுபவர்களை அகற்றுவதன் மூலம் இஸ்லாமியச் சமூகம் வளம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.
இனி வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான பணம் இடைத்தரகர்களால் கொள்ளை அடிக்கப்படாமல் ஏழை மக்களைச் சென்றடையும் எனத் தெரிவித்துள்ள அண்ணாமலை, இந்த சட்டத்திருத்தம் வக்ஃப் வாரியத்தின் கோரிக்கைகளைச் சரிபார்க்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குகிறது எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்ற இண்டி கூட்டணியின் பரப்புரையை உள்துறை அமைச்சர் அமித்ஷா தகர்த்தெறிந்ததாகப் பதிவிட்டுள்ள அண்ணாமலை, இஸ்லாமியர்களின் மத நடவடிக்கைகள் மற்றும் அறக்கட்டளைகளில் தலையிடும் எண்ணம் மத்திய அரசுக்கு துளியும் இல்லை என தெரிவித்துள்ளார்.